ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ?

0
221

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ?

ஈரான் படைத்தளபதியை அமெரிக்கா கொன்றதை அடுத்து அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. அதற்குக் காரணம் அமெரிக்கப் படைகள் ஈரான் படைத்தளபதி சுலைமானியை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மேல் தாக்குதல் நடத்தியது.

ஆனால் அந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஆல் ஈஸ் வெல்’ எனக் கூறினார். ஆனால் இப்போது அந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 34 பேர் மூளைக் காயம் அடைந்ததாக அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமான பெண்டகன் வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 34 வீரர்களும் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிகிச்சைப் பெற்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  சில வீரர்கள் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டு விட்டார்கள். இந்நிலையில் இத்தனை வீரர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் ட்ரம்ப் அப்படி எதுவும் நடக்கவில்லை என சொன்னது குறித்து பொதுமக்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Previous articleகோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு காரியத்தில் உறுதியாக இருப்பது நன்மையல்ல! மருத்துவர் ராமதாஸ் காட்டம்
Next articleஎங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !