இன்றைய போட்டியிலும் 350+ ரன்கள்! ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென்னாப்பிரிக்கா
இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி 358 ரன்கள் குவித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் அதிகமுறை 350க்கும் அதிகமாக பல முறை ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது.
இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ராசி வென் டர் டுசேன் சதம் அடித்து 133 ரன்கள் சேர்த்தார். குயின்டன் டிகாக் சதமடித்து 114 ரன்கள் சேர்த்தார். டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி இரண்டு விக்கெட்டுகளையும், போல்ட், நீஷம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். தற்பொழுது 359 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகின்றது.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடர்களில் 9 முறை 350 ரன்களுக்கும் அதிகமாக ஒரு இன்னிங்சில் ரன் அடித்ததுள்ளது.
தற்பொழுது தென்னாப்பிரிக்கா அணி இன்றைய(நவம்பர்1) போட்டியில் 358 ரன்கள் அடித்து உலகக் கோப்பை தொடரில் 9வது முறையாக 350க்கும் அதிகமான ரன்கள் அடித்த அணியாக இருந்த ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 4 முறை 350க்கும் அதிகமாக ரன்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது.