தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள்: முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்!!

0
99

தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடரின் போது பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் 9.66 கோடி ரூபாய் செலவில் கூட்டுறவுத் துறை சார்பில் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 401 கடைகள், நாகப்பட்டினத்தில் 262 கடைகள், திருவண்ணாமலையில் 212 கடைகள், கிருஷ்ணகிரியில் 168 கடைகள் உட்பட தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைக்க உள்ளார்.

Previous articleபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்!
Next articleமுன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காலமானார்!