டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?
இது குறித்து சிறப்பு போலீஸ் பிரிவு தலைவர் நீரஜ் தாக்கூர் இவ்வாறு கூறினார். போதை மருந்து கடத்தல் தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த போதை மருந்துகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மறைக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக மும்பையில் இருந்து டெல்லிக்கு, கடல்வழியாக அவைகள் கொண்டுவரப்பட்டதாகவும், மருந்துகள், அது சம்பந்தமான பொருட்கள் பஞ்சாபிற்கு வழங்கப்பட இருந்ததாகவும் தெரிகிறது.
இந்த போதை மருந்துகள் மத்திய பிரதேசத்தில் உள்ள சிவபுரிக்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பதப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை மறைக்க பரீதாபாத்தில் ஒரு வீடும் வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதனை இயக்குபவர் ஆப்கானிஸ்தானில் உள்ளார், என்று கைது செய்யப்பட்டவர்கள் கூறினார்கள்.
மேலும், டெல்லியில் சிறப்பு போலீஸ் படை 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 354 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். இது தொடர்பாக இதுவரை ஹரியானாவை சேர்ந்த 3 பேரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் என நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாகவே போதைப்பொருள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே ஒரே வன்மத்துடன் மக்கள் உள்ளனர். இதில் இந்த மாதிரி பொருட்களை பயன்படுத்தினால் அவர்களின் எதிர்காலம் எப்படி சிறப்பாக இருக்கும்.