பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!!பயணிகள் 36 பேர் பலி!!

Photo of author

By Jeevitha

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!!பயணிகள் 36 பேர் பலி!!

Jeevitha

36 passengers died in a bus overturned in a ditch!!

Uttarakhand: உத்தரகண்ட் மாநிலத்தில் பயணிகளின் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 36 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் குபி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 36 பேர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கான காரணம் என கூறுகின்றனர்.

இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி உயிரிழந்த 36 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பேருந்தில் சுமார் 46 பயணிகளை ஏற்றி சென்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இது போற்ற சம்பவத்தால் மக்கள் மலை பகுதிகளில் பேருந்தில் செல்லும் போது அச்சத்தில் செல்கிறார்கள்.