தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!!
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4-ம் தேதி நிறைவடைந்தது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (பிப்ரவரி 17-ந் தேதி) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குபதிவு நடைபெறும் நாளில் (பிப்ரவரி 19-ந் தேதி) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் பகுதிகள் மற்றும் அந்த பகுதிகளுக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை பிப்ரவரி 17-ந் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 20-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட உத்தரவிடப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள வருகிற 22ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் மற்றும் அந்த பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பகுதிகளில் உள்ள மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில், தேர்தல் நடிபெற உள்ள பகுதிகளில் இருந்த 3,621 மது கடைகள் மூடப்பட்டுள்ளன. நாளை வரை இந்த கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.