உக்ரைனில் இருந்து நேற்று ஒரே நாளில் தாயகம் திரும்பிய 3000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்!

Photo of author

By Sakthi

உக்ரைன் நேச நாட்டுப் படைகளின் அமைப்பில் சேர வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறது இதற்காக உதவி புரிவதற்கு அமெரிக்காவும் தயாராகவுள்ளது.

ஆனாலும் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவது ரஷ்யாவிற்கு பிடிக்கவில்லை ஆகவே கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது எடுத்து அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு ஆரம்பித்தது. முக்கியமான பகுதி மூடப்பட்டதால் காரணமாக, இந்திய மாணவர்கள் அனைவரும் ருமேனியா அங்கே ஏரி உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலமாக தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள்.

ருமேனியா, ஹங்கேரி, போலந்து, உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியோடு அந்தந்த நாடுகளுக்கு இந்திய விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். அதோடு உக்ரைனின் அண்டை நாடுகளும் இந்தியாவிற்கு தாயுள்ளத்தோடு உதவி புரிந்து வருகிறார்கள்.

மேலும் உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக சிறப்பு தொடர் வண்டிகளை இயக்க வேண்டும் என்று உக்ரைனிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்தது. ஆனாலும் இது தொடர்பாக எந்தவிதமான பதிலும் தெரிவிக்காததால் ரஷ்யா 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை இந்திய மாணவர்களை மீட்பதற்காக இயக்குவதாக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளில் முதலில் ஏர் இந்தியா, இன்டிகோ, உள்ளிட்ட தனியார் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதன் அடுத்த கட்டமாக விமானப்படையும் களத்தில் இறங்கியது. விமானப்படையின் சி17 ரக விமானங்கள் நேற்று முன்தினம் முதல் உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து இந்திய மாணவர்களை அழைத்து வர தொடங்கியிருக்கின்றன.

அந்த விதத்தில் நேற்று ஒரே நாளில் 14 பயணிகள் விமானம் 3 விமானப்படை விமானங்கள் மூலமாக 3772 இந்தியர்கள் உக்ரைனிலிருந்து அழைத்துவரப்பட்ட இருப்பதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஆகவே உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு உள்ள இந்திய மாணவர்களுடன் 15 விமானங்கள் இன்று இந்தியா வந்து சேரும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.