இந்தியாவில் நோய்த்தொற்று நிலவரம்! புதிதாக 39 ஆயிரத்து 361பேருக்கு நோய்தொற்று!

Photo of author

By Sakthi

இந்தியாவில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வராத சூழலில் தினசரி பாதிப்பு அதிகமாக இருக்கிறது.. நாடு முழுவதும் இன்று காலை வரையிலான தொடர்ந்து 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரத்து 167 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 262 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்ற ஒரு வாரத்தில் 2.7 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, தினசரி பாதிப்பு சுமார் 38 ஆயிரம் ஆக இருக்கிறது. இதற்கு முந்தைய வாரத்தில் சராசரியாக 38 ஆயிரத்து 548ஆக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதன் மூலமாக ஒருவார பாதிப்பு 3.2 சதவீதம் குறைந்து இருப்பது புள்ளிவிவரத்தில் தெரியவந்திருக்கிறது. முந்தைய வாரங்களில் ஒருவார பாதிப்பு 6.5 5.5% சதவீதம் வரையில் குறைந்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சென்ற வாரத்தில் வெறும் 1.2 சதவீதம் மட்டுமே குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று புதிதாக 17 ஆயிரத்து 466 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஏழு தினங்களில் மட்டும் 1.10 லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இது அதற்கு முந்தைய வாரத்தை விட 15 புள்ளியில் 7 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
சென்ற 7 வாரங்களில் ஒரு மாநிலத்தில் ஒரு வார மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது இல்லை. இருந்தாலும் கேரளாவில் இந்த வார பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து இருக்கிறது. நாடு முழுவதுமான ஒருவார பாதிப்பில் 41% கேரளாவில் மட்டுமே உண்டாகியிருக்கிறது.