மீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !!

மீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையின் வடக்கு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் மும்பையில் வடக்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்தது. அதில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள் மற்றும் அந்தப் பகுதிகளில் சேதங்கள் குறித்த விபரங்கள் தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் மும்பையில் கடந்த சில நாட்களாகவே ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆன நிலநடுக்கமானது தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Comment