பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!

Photo of author

By Parthipan K

பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!

உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டம் குல்ரிஹா பகுதியை சேர்ந்த ராதாவா டும்ரி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய மகன் பவன் குமார் பாஸ்வான், இவர் சர்கானில் உள்ள பரமேஷ்வர்பூர் தர்காட் தொடக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இவர் தனது தாய்வழி தாத்தா புத்த பாஸ்வானுடன் பரமேஷ்வர்பூரில் வசித்து வருகின்றார்.

வழக்கம் போல் பவன் நேற்று பள்ளிக்கு சென்றார். அதனை தொடர்ந்து மாலை ஆனதும் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பினார்கள் ஆனால் பள்ளிக்கு சென்ற பவன் வீட்டில் இல்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் பவனை தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் அந்த சிறுவன் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து அந்த பள்ளியில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு சென்று அந்த கிராம மக்கள் பார்த்தனர். பள்ளிக்கு அருகில் சென்று பார்த்தபோது பள்ளி வகுப்பறையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. குழந்தை வகுப்பறையில் பூட்டிக்கிடந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து சிலுவடால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து குழந்தையை வெளியே எடுத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பள்ளியில் குழந்தை தூங்கி கொண்டிருந்த நிலையில் யாரும் கவனிக்காமல் பூட்டி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தொகுதி கல்வி அலுவலர் சார்கன்வாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.