நாட்டில் 4 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

Photo of author

By Sakthi

நாட்டில் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்து இருக்கிறது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்2, 85 , 914 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 2,55,884 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,0085,116 ஆக இருக்கிறது தற்சமயம் 22,23,018 பேர் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்ற 24 மணி நேரத்தில் 2,99073 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் இதன் காரணமாக, இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ,73,7971ஆக உயர்ந்தது இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்த்தொற்று காரணமாக 265 பேர் பலியாகி இருப்பதால் பலியானோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 120 ஆக அதிகரித்திருக்கிறது. தற்சமயம் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 16.15 சதவீதமாக இருக்கிறது.

இதுவரையில் 1, 64,58,536 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.