செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

0
264

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முறை செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான முடிவு வருவதற்கு  சுமார் மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை ஆகிறது. எனவே பரிசோதனைகளை விரைவாக செய்து அதற்கான முடிவுகள் உடனே கிடைப்பதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இது ‘ஹார்மனி’ கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகையில்,

குறைந்த கட்டணத்தில் எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக இந்த சோதனையை வடிவமைத்துள்ளதாகவும், குறைந்த கட்டணம் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை உள்நாட்டிலும் மற்றும் உலகமெங்கும் அணுகக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுகிறது. எனவே இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகிறது. அதைவிட முக்கியமாக மிக விரைவாக இருபது நிமிடங்களில் பரிசோதனையின் முடிவை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் பயன்படுத்தக்கூடிய டிடெக்டர், ஒரே நேரத்தில் நான்கு  மாதிரிகளை சோதிக்கிற திறன் கொண்டது. மேலும் இந்த சோதனை முடிவு மிகத் துல்லியமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த புதிய வகை கொரோனா பரிசோதனை மூலமாக, வைரஸ் மரபணுவின் மூன்று வெவ்வேறு பகுதிகளை கண்டறியப்படுகிறது என்றும், ஒரு புதிய மாறுபாடு ஒரு பிராந்தியத்தில் பல பிறழ்வுகளைக் கொண்டிருந்தால் புதிய சோதனை மற்ற இரண்டையும் கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டஜன் கணக்கிலான உருமாற்றங்களைக் கொண்டுள்ள ஒமைக்ரான் மாறுபாட்டை இதனால் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Previous articleதமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Next articleநாட்டில் 4 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here