இந்திய அணியில் 4 முக்கிய வீரர்கள் நீக்கம்!! பொங்கி எழுந்து பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!!

Photo of author

By Vijay

CRICKET: இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா நீக்கப்படுவதாக தகவல் வெளியகிவருகின்றது.

இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய நான்கு மூத்த வீரர்கள் நீக்க வேண்டிய முக்கிய முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறவில்லை இதனால் இந்த நால்வரின் எதிர்காலம் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

4 key players removed from the Indian team

4 key players removed from the Indian team

சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி நீண்ட வருடங்களுக்கு பின் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் பிசிசிஐ கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் மிகவும் கடினமான சூழல் உருவாகி உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது.

அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் நியூசிலாந்து அணி தொடரில் முழுவதும் தோற்றதால் இந்த போட்டியில் 4 போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் டிரா செய்தால் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.