3 மாதத்தில் 4 திருமணம் செய்த இளம்பெண்! அனைவருடனும் உல்லாசம்! பின் நடந்த சோகம்!

Photo of author

By Kowsalya

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதத்தில் நான்கு பேரை திருமணம் செய்து உல்லாசமாக இருந்து அனைவரையும் ஏமாற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இளைஞர் ஒருவர் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

விசாரணை நடத்திய  போலீசார் அந்த பெண் தான்  வீட்டில் உள்ள பொருளை திருடி உள்ளார் என விசாரணையில் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் அதே போல் தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி இவரை திருமணம் செய்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி கொண்டு ஓடிபோயுள்ளார் என தெரிய வந்துள்ளது.

மேலும் மூன்று மாதத்தில் மேலும் மூன்று பேரை திருமணம் செய்து ஜாலியாக இருந்து விட்டு வீட்டில் உள்ள பொருட்களை திருடி கொண்டு சென்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.