#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட்

0
121

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலம் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையானது கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீதும், அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் திருமலை சஸ்பெண்ட செய்யப்பட்டுளளார்.

சஸ்பென்ட் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளராக பணி செய்து வருகிறார். காவல் அதிகாரி திருமலை தவிர மேலும் 3 போலீஸ்காரர்கள் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

Previous articleதனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய உத்தரவு!
Next articleதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!