அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் உறுதி!! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, கழிவறை, குளிர்சாதன வசதி போன்ற அனைத்து வசதிகளும் இந்த பேருந்துகளில் உள்ளது. இதன்படி 1078 விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விரைவு பேருந்துகள் நீண்ட தூர பயணத்திற்காக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
இந்த பேருந்துகளில் அனைவரும் முன்பதிவு செய்தாலும், பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்வதற்காக 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது நான்காக உயர்த்தப்படும் என சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
அதன்படி பெண்களுக்கான நான்கு இருக்கைகள் தற்போது அமலுக்கு வந்தது. இருக்கைகள் மட்டும் இருக்கும் பேருந்துகளில் 4 இருக்கைகளும், படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகளில் 2 படுக்கை மற்றும் 2 இருக்கைகள் ஒதுக்கப்படும். இதற்கான பயண சீட்டுகளை www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் அல்லது tnstc என்ற செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளம் அல்லது செயலியில் முன்பதிவு செய்யும் போது பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் காண்பிக்கும். இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டவுடன் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். இந்த பெண்களுக்கான இருக்கைகள் கடைசி வரை முன்பதிவு செய்யபடாமல் இருந்தால், மற்ற பயணிகளுக்கு அந்த இருக்கைகள் வழங்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.