4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!! உடலை புதைத்த மிருகம்!!கதறி அழும் பெற்றோர்!!

Photo of author

By Jeevitha

திருப்பதி வடமலை பேட்டை மண்டலம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பக்கத்துக்கு வீட்டில் உள்ள குழந்தையை சாக்லேட் கொடுத்து காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

திருப்பதி வடமலை பேட்டை மண்டலம் அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயதை சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 22 வயது வாலிபர் சுஷாந்த் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் சிறுமியின் உடலை காட்டில் குழி தோண்டி புதைத்து விட்டார்.

இதை அறியாத சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை  காணவில்லை என்று கவலையுடன் தேடி வந்தனர். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் சாக்லேட் கொடுத்து அந்த சிறுமியை சுசாந்த் அழைத்து சென்றதை சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தார். இது தெரிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது உண்மை அனைத்தையும் சொல்லிவிட்டார். இதனை அறிந்த பெற்றோர் கடும் வேதனையில் சுஷாந்தை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சுஷாந்த் கொடுக்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் சிறுமியின் உடலை தோண்டி எடுத்தனர். அதனை பார்த்த பெற்றோர் கண்ணீர் மல்கி அழுதனர். பிறகு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடலை அங்கு உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது போன்ற கொடிய மிருகங்கள் இன்னும் நம் நாட்டில் இருந்து கொண்டே தான் உள்ளது.

இந்த மிருகங்கள் அழியும் போது தான் நம் நாட்டு பெண் மணிகள் தைரியமாக வெளிவர முடியும். இதை எதிர்த்து கேட்டால் சில அறிவில்லா மனிதர்கள் பெண்கள் உடுத்தும் உடையில் தான் இருக்கிறது என்பார்கள். இப்போது அந்த நான்கு வருட பெண் குழந்தை அணிந்த உடையிலா ஒருவன் மிருகமாக மாறினார்.