41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா!

0
145
41 pregnant women killed Corona who started his game!
41 pregnant women killed Corona who started his game!

41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா! மீண்டும் ஊரடங்கா?

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுதும் மக்களை வாட்டி வதைக்கிறது. அந்தவகையில் முதல் மற்றும் இரண்டு அலைகளை கடந்து வந்துள்ளோம்.தற்பொழுது மூன்றாவது அலை இந்த வருட இறுதிக்குள் உருவாகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினார். ஆனால் இரண்டாம் அலையின் பாதிப்பினால் அதிக கட்டுப்பாடுகளுடன் அனைத்து மாநிலங்களும் தற்பொழுது செயல்படுகிறது. இக்காரணத்தினால் மூன்றாவது அலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒருசில மாநிலங்களில் இன்று வரை தொற்றின் பாதிப்பு குறைந்த பாடில்லை. தற்பொழுது புதிதாக ஏ ஒய்.4 என்ற வகை கொரோனா தொற்றானது உருவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

இது அதிக அளவில் பரவி வருவதாக தெரிவித்தனர். இதனால் அதிக அளவு உயிர்சேதம் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல கேரளாவில் மாநில சட்டப்பேரவையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ பல கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக வீணா ஜார்ஜ் கூறியதாவது, கேரள மாநிலத்தில் கரோனா தடுப்பூசியை இதுவரை 82.61 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். அதேபோல வரும் காலங்களில் கேரளாவில் மொத்த மக்கள் தொகையில் இருந்து 17 சதவீதம் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

மேலும் இந்த கொரோனா தொற்று வந்த ஒன்றரை ஆண்டுகளில் இத்தொற்றுக்கு பயந்து 149 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.அதுமட்டுமின்றி தொற்றால் நாற்பத்தி ஒன்று கர்ப்பிணி பெண்கள் தற்பொழுது வரை உயிரிழந்துள்ளனர்என்று கூறினார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,945 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.மற்ற மாநிலங்களில் தினசரி பாதிப்புடன் இதை ஒப்பிட்டு பார்க்கையில் கேராளவில் அதிகமாக காணப்படுகிறது.தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போது கூடிய விரைவில் அங்கு ஊரடங்கு போடப்படும் என கூறுகின்றனர்.

Previous articleஇனி ரேஷன் கடைகளின் மூலம் சிலிண்டர் விற்பனை-மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு.!!
Next articleஎதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!