குணப்படுத்த முடியாத அரியவகை நோயால் அவதிப்படும் 41 வயது நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
289
41-year-old actor suffering from a rare incurable disease!! Shocked fans!!
41-year-old actor suffering from a rare incurable disease!! Shocked fans!!

குணப்படுத்த முடியாத அரியவகை நோயால் அவதிப்படும் 41 வயது நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் தமிழில் சூப்பர் டீலக்ஸ்,வேலைக்காரன்,விக்ரம்,மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.தற்பொழுது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் பகத் விரைவில் “மாரீசன்” என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் பகத் பாசிலுக்கு மாமன்னன் மூலம் ரசிகர்கள் கூட்டம் உருவானது.ரத்தினவேல் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பின் அசுரன் என்பதை நிரூபித்தார்.பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஆவேசம்” படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மலையாளம்,தமிழை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் பகத் தனக்கு Attention Deficit Hyperactivity Disorder(ADHD) என்ற அரியவகை நோய் இருப்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது 41 வயதாகும் பகத்துக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டு நிலையில் அதை குணப்படுத்துவது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்று தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் ADHD என்றால் என்ன நோய் என கூகுளில் அவரது ரசிகர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Attention Deficit Hyperactivity Disorder(ADHD):

முதலில் இவை ஒரு நோய் அல்ல.மூளை செயல்பாட்டின் ஒரு வித வளர்ச்சி குறைபாடு ஆகும்.இவை பெரும்பாலும் குழந்தைகளை தான் பாதிக்கும்.இந்த பாதிப்பை குழந்தை பருவத்தில்  கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

ADHD நோயின் அறிகுறிகள்:

இந்த பாதிப்பால் அவதியடைந்து வரும் குழந்தைகளுக்கு கவனக்குறைவு சீர்குலைவு ஏற்படும்.இவர்களின் செயல்பாடு அதிவேகமாக இருக்கும்.அது மட்டுமின்றி இவர்களால் ஒரு இடத்தில் நீண்ட நேரம் அமர முடியாது.

அடிக்கடி மறதி மற்றும் குழப்பம் ஏற்படும்.இவர்கள் ஒரு இடத்தில் பொருளை வைத்தால் அது பற்றி மறந்து விடுவார்கள்.பண விவகாரத்திலும் அதிக மறதி மற்றும் கவனக் குறைவோடு இருப்பார்கள்.இவர்களால் 20 நிமிடங்களுக்கு மேல் அமைதியாக இருக்க முடியாது.உடன் இருப்பவர்களை பேச விடாமல் இவர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள்.இந்நிலையில் பகத் பாசிலுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதை கண்டு அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Previous articleசிவாஜி கணேசன் நடித்த 200வது திரைப்படம்! தெய்வமகன் திரிசூலமாக மாறிய கதை!
Next articleIRCTC: குரல் பதிவு மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!