இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர் இறுதிப் பட்டியல்! தமிழகம் முழுவதும் 2743 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

0
160

தமிழகத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தலுக்கான தேதி தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதிலிருந்து தமிழகம் பரபரப்பாக காணப்படுகிறது தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருகிறது. அதேபோல தேர்தல் பறக்கும்படை தமிழகம் முழுவதிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.இந்தநிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது கடந்த 12ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 19ஆம் தேதி வரையில் நடைபெற்றது இந்த நிலையில் 19ஆம் தேதி மாலை 3 மணி அளவில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் 6183 ஆண்களும் 1069 பெண்களும் மற்றும் மூன்று திருநங்கைகளும் என்று 7 ஆயிரத்து 255 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில், வேட்பாளர்களுக்கான சரியான ஆவணங்கள் போன்றவற்றை முறையாக செலுத்தாத விருப்பும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த விதத்தில் 2716 வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. என்று தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு 4 ஆயிரத்து 492 வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், மார்ச் மாதம் 22 ஆம் தேதியான இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று மாலை மூன்று மணியோடு இதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. அதன்பிறகு இன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல தமிழ்நாடு முழுக்க இதுவரையில் 4 ஆயிரத்து 512 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. 2716 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார் இன்று மாலை வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட இருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஇந்த நிறுவனத்தின் மூலம் தான் கொரானா பரவுகிறது! அதிர்ச்சியில் பணியாளர்கள்!
Next articleவாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!