46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!!

Photo of author

By Preethi

46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!!

 

விலங்குகளை பலரும் பாசத்துடனும் மனிதாபிமானத்துடனும் பார்த்து வருகின்றனர். விலங்குகளை செல்லப்பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சில மனிதாபிமானம் இல்லாத கொடூர மனிதர்கள் விலங்குகளை மிகவும் கொடுமை செய்து வருகின்றனர். இதில் சென்ற ஆண்டு கேரளத்தில் கர்ப்பமான யானைக்கு உணவில் வெடிவைத்து, அது வயிற்றில் சென்று வெடித்து யானை துடிதுடித்து இறந்த காட்சிகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வனத்துறையினர் வெடி வைத்த நபரை தேடி கைது செய்தனர்.

 

மேலும் சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல பிராணியான நாய் ஒன்றை சிலர் கட்டி வைத்து அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தின் சக்லேஷ்பூர் பகுதியில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி செய்து உள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்ற போது அறுபது குரங்குகளில் 14 குரங்குகள் மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த குரங்குகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 குரங்குகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

 

குரங்குகளுக்கு விஷம் கொடுத்து விட்டு விஷம் கொடுத்த பாட்டிலை சாலையின் ஓரத்திலேயே வீசிவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதைதொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். குரங்குகளை தெய்வமாக மதித்து வணங்கும் இந்த மண்ணில் பிறந்த சிலர், இந்த அப்பாவி குரங்குகளை விஷம் வைத்து கொள்ளும் அளவிற்கு சைக்கோவாக இருக்கிறார்கள். இந்த குரங்குகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் மீதான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவகிறது. இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.