47 கிராமங்கள் நீரில் முழ்கிய அவலம்!! இந்த மாநில மக்களை மீண்டும் கவலைடையச் செய்துள்ளது!!

0
102
47 villages submerged in water. This has made the people of this state worry again!!
47 villages submerged in water. This has made the people of this state worry again!!47 villages submerged in water. This has made the people of this state worry again!!

47 கிராமங்கள் நீரில் முழ்கிய அவலம்!! இந்த மாநில மக்களை மீண்டும் கவலைடையச் செய்துள்ளது!!

அசாமில் ஜூலை மாதம்  தொடங்கிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்  தொடர்ந்த கனமழையால் பல்வேறு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மேலும் பல இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை  விடுத்திருந்தது. இதனையடுத்து  அதிதீவிர கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே அதிக வெள்ள பாதிப்புகள் இருக்கும் நிலையில் இன்னும் மூன்று நாள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை மக்களை மீண்டும் கவலைடைய வைத்துள்ளது.

பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு  40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் பாதிக்கபட்ட மக்களை பேரழிவு மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து பிஸ்வநாத் கீழ் உள்ள  47 கிராமங்கள் நீரில் மூழ்கியது.

மேலும் 858 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளர்கள். அதனையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 22 நிவாரண முகாம்கள் மற்றும் 71 நிவாரண விநியோக மையம் அமைந்துள்ளது. இதனையடுத்து நடைபெற்ற ஆய்வில் பிரம்மபுத்திரா மற்றும் துணை நதிகள் இன்னும் அபாய கட்டத்தை தொட்டுள்ளது.

இது மட்டுமின்றி பல இடங்களில் மண்ணரிப்பு,நிலச்சரிவு, சாலைகள் மற்றும் வீடுகள் அதிகம் சேதமடைந்துள்ளது. மேலும்  நிவாரண பொருட்கள் வழங்கும் மையம் நான்கு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

Previous articleஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!! கையில் அருவாளுடன் கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!!
Next articleஇந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படாது!! தமிழக அரசின் உத்தரவு!!