பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் செல்லும் 5 போட்டியாளர்கள்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்த தகவல்!!! 

0
100
#image_title
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் செல்லும் 5 போட்டியாளர்கள்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்த தகவல்!!!
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக  5 போட்டியாளர்கள் செல்லவுள்ளதாக நடிகரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து உள்ளார்.
கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாணடமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது வரை மிக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் வைல்டு கார்ட் என்ட்ரியில் எப்பொழுது போட்டியாளர்கள் உள்ளே செல்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மத்தியில் அவ்வப்போது வைல்டு கார்ட் என்டிரியில் பிக்பாஸ் வீட்டில் நுழையப் போகும் போட்டியுளர்கள் குறித்து தகவல்கள் பரவி வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது வைல்டு கார்ட் என்ட்ரியில் ஐந்து நபர்கள் உள்ளே நுழையும் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று(அக்டோபர்23) வெளியான புரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் “பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் 15 போட்டியாளர்கள் அனைவரும் செட்டில் ஆகி ஒரு பேட்டர்னில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். முன்பு எல்லாம் போட்டியாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடும் பொழுது ஒரு வைல்டு கார்ட் போட்டியாளரை உள்ளே அனுப்புவோம். மாறுதல் ஏற்படும்.
தற்பொழுது வீடு இரண்டாக உள்ள நிலையில் வைல்டு கார்ட் போட்டியாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். இரண்டு அல்ல இந்த முறை 5 வைல்டு கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழையப் போகிறார்கள். இந்த ஐந்து பேரும் விளையாட்டை புரிந்து கொண்டு உங்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு உள்ளே நுழைய போகிறார்கள்.
இதனால் ஆட்டம் எப்படி மாறப் போகிறதோ. காத்திருங்கள். அக்டோபர் 29ம் தேதி” என்று நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 29ம் தேதி வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் 5 போட்டியாளர்கள் செல்வார்களா அல்லது இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.