GBU Ajith: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை காட்டிலும் அதில் வரும் பாடல்கள் தான் இன்ஸ்டா சோசியல் மீடியாக்கள் எங்கும் ரீல்ஸ் செய்து வருகின்றனர். இதில் அஜித், தான் நடித்த படத்தின் அனைத்து வேடங்களிலும் வருவதுண்டு. இப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மக்களை மூட் அவுட் ஆக்கும் வகையில் எந்தக் காட்சியும் சேர்க்கவில்லை. படத்தை இறுதி வரை சூமூத்தாகவே கொண்டு சென்றுள்ளார். தற்போது வரை இப்படத்தில் வசூல் வேட்டை எகிறி வருகிறது என்று சொல்லலாம்.
படம் பார்த்து வெளியே வருபவர்கள் அனைவரும் நல்ல கருத்தையே கூறுகின்றனர். அப்படி இருக்கையில் இளையராஜாவின் மூன்று பழைய பாடல்களை அவரின் அனுமதி வாங்காமலேயே உபயோகித்து விட்டதாக நோட்டீஸ் விடுத்துள்ளனர். இது ரீதியாக ஐந்து கோடி நஷ்ட ஈடும் கேட்டுள்ளனர். ஆனால் இது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இப்படத்தில் பயன்படுத்திய மூன்று பாடல்களும் அப்பாடல்களுடைய நிறுவனத்தின் அனுமதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல அப்பாடலை கேலி செய்தோ மாற்றியோ வடிவமைக்கப்படவில்லை. மேற்கொண்டு நாங்கள் உபயோகித்ததற்கு அந்நிறுவனத்திடம் பணமும் கொடுத்துள்ளோம். அது மட்டுமின்றி நாங்கள் தடையில்லா சான்றும் வாங்கியுள்ளோம். இதனால் இளையராஜாவிடமிருந்து எந்த ஒரு நோட்டீஸ் வந்தாலும் அதை சட்டரீதியாக எதிர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல முன்னதாக ஓர் படத்தில் இளையராஜா தனது பாடலை உபயோகித்து விட்டதாக கூறி நஷ்ட ஈடு கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.