இந்த ஆண்டு 5 கோடி பேர் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என தகவல்!
நடப்பாண்டில் உள்நாட்டு விமாங்களில் 5 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பல்வேறு விமான நிறுவனங்கள் அளித்த தரவுகளின் படி நடப்பாண்டு உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட 42.85 சதவீதம் அதிகம் ஆகும்.
முந்தைய ஆண்டில் 3 கோடியே 53 லட்சம் பேர் பயணித்துள்ளனர். மேலும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டு விமானங்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 22.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் கடந்த 2022ம் ஆண்டை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டு விமானங்களின் சேவையை ரத்து செய்தவர்களின் எண்ணிக்கை 0.47 சதவீதமாக உள்ளது. பயணிகளின் புகார்களும் 10000 பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.