பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

0
132

1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

அதன் கால அட்டவணை வருமாறு-

மொழி பாடம் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதியும், ஆங்கில தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி கணித தேர்வு, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அறிவியல் தேர்வு, செப்டம்பர் மாதம் 29ஆம் தேதியும், சமூக அறிவியல் தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டு விட்டது.

தற்சமயம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காலாண்டு தேர்வு எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறார்கள். அதோடு காலாண்டு தேர்வை தொடர்ந்து ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு முடிவடைந்த உடன் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு காலாண்டு விடுமுறை முடிவடைந்தவுடன் அக்டோபர் மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.