இதுவரை ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… யாருக்கு எத்தனை வெற்றி?

0
88

இதுவரை ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… யாருக்கு எத்தனை வெற்றி?

ஆசியக்கோப்பை தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. நாளை மறுநாள் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது.

நான்காண்டுகளுக்குப் பிறகு ஆசியக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த முறை 20 ஓவர் கிரிக்கெட் தொடராக நடக்க உள்ளது. 6 அணிகள் இந்த முறை தொடரில் கலந்துகொள்கின்றன. ஆசியக்கோப்பையை பொறுத்தவரை 7 முறை கோப்பையை வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

இந்த முறை இரு பலம் மிக்க அணிகளாக பாகிஸ்தானும், இந்தியாவும் கருதப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு அணிதான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை ஆசியக் கோப்பை தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளில் இந்தியாவும் 5 போட்டிகளில் பாகிஸ்தானும் வெல்ல, ஒரு போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டுள்ளது. அந்த போட்டிகள் பற்றிய விவரம்

  • 1984 ஆசியக் கோப்பைப் பதிப்பில், இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
  • 1988 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
  • 1995 ஆசியக் கோப்பைப் போட்டியில், பாகிஸ்தான் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
  • 1997 ஆசிய கோப்பை பதிப்பில், போட்டி மழையால் கைவிடப்பட்டது.
  • 2000 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • 2004 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • 2008 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
  • 2010 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
  • 2012 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
  • 2014 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • 2016 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • 2018 ஆசிய கோப்பை பதிப்பில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை SEP 19 அன்று வென்றது.
  • 2018 ஆசிய கோப்பை பதிப்பில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை SEP 23 அன்று மீண்டும் வென்றது.