3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல்
ஆப்பிள் தனது விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய 1.5 லட்சம் பேரின் வேலைவாய்ப்பில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கான இரண்டு ஆலைகளை இயக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் ஆப்பிள் விற்பனையாளர்களில் அதிக அளவிலான வேலைகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள், அதன் விற்பனையாளர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஆப்பிளின் விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் மூலமாக இந்தியாவில் 1.5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அந்த வகையில் ஆப்பிளுக்கு இரண்டு ஆலைகளை நடத்தி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மிகப்பெரிய வேலைகளை உருவாக்கி வருகிறது.
“ஆப்பிள் இந்தியாவில் பணியமர்த்துவதை துரிதப்படுத்துகிறது. பழமைவாத மதிப்பீட்டின்படி, அதன் விற்பனையாளர்கள் மற்றும் உதிரிபாகங்கள் சப்ளையர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தப் போகிறது” என்று ஒரு மூத்த அரசு அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து தொடர்பு கொண்டபோது, ஆப்பிள் நிறுவனம் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
அடுத்த 4-5 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தியை ஐந்து மடங்கு அதிகரித்து சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் 3.32 லட்சம் கோடி) அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக அதிக வருமானத்துடன் இந்திய சந்தையை ஆப்பிள் வழி நடத்தியது, அதே நேரத்தில் சாம்சங் மொத்த விற்பனையின் அடிப்படையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஆப்பிள் ஏற்றுமதியில் 10 மில்லியன் யூனிட் அளவைத் தாண்டி முதல் முறையாக ஒரு காலண்டர் ஆண்டில் வருவாயில் முதல் இடத்தைப் பிடித்தது என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஆப்பிளின் ஐபோன் ஏற்றுமதி 2022-23ல் 6.27 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2023-24ல் 12.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது கிட்டத்தட்ட 100 சதவீத பெரிய எழுச்சியைக் குறிக்கிறது என்று வர்த்தக நுண்ணறிவு தளமான தி டிரேட் விஷன் தெரிவித்துள்ளது.