துப்பாக்கி சூட்டில் இறந்த தனது கணவரின் இரத்தத்தை துடைத்த 5 மாத கர்ப்பிணி மனைவி!!

Photo of author

By Vinoth

மத்தியப் பிரதேசத்தில் அதிகம் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டம் திண்டேரி உள்ள லால்பூர். அங்கு சில குடும்பங்கள் வசித்து வருகின்றது. அதில் நீண்ட காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது இந்த குடும்பங்கள் இடையில்.

மேலும் இந்த நிலத்தகராறு பிரச்சனை நேற்று அதிகமான நிலையில் ஓரு கும்பத்தை சேர்ந்த தந்தை, மற்றும் அவரின் மகன்கள் உள்ளபட நான்கு பேர் சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் ஓரு மகனும் சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் 2 மகன்கள் சிவராஜ், ராம்ரா  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் போகும் வழியில் ராம்ரா  இறந்து விட்டார். மீதி இருந்த சிவராஜ்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் இறந்து கிடந்த ரத்தம் படிந்த மருத்துவப் படுக்கையை சிவராஜின் 5 மாத கர்ப்பிணி மனைவி ரோசினியை வைத்து சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறது அந்த மருத்துவமனை நிர்வாகம். அதனை சுத்தம் செய்வதை இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த செயலுக்கு மருத்துவம்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனில் அந்த பெண் எனது கணவர் இரத்தத்தை நான் ஆதரமாக வைத்துகொள்ள சுத்தம் செய்து விடுகிறேன் என்று கூறி உள்ளார்.

இது குறித்து போலீஸ் விசாரணை  நடத்தி வருகிறது. மேலும் இந்த துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 பேர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறது.