மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற செய்த விவகாரம்! 5 பேர் அதிரடி கைது!

0
116

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மாருதி நிறுவனத்தின் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் தேர்வு எழுத சென்ற மாணவியின் மேல் மற்றும் உள்ளாடை உள்ளிட்டவற்றை கழட்ட நிர்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல்துறை புகார் வழங்கினார், தன்னுடைய மகளை போல மற்ற மாணவிகளையும் உள்ளாடையை கழற்றி சொல்லி நிர்பந்தம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று தேசிய தேர்வு முகமை கூறி இருக்கிறது.

தேர்வு மைய கண்காணிப்பாளர் பார்வையாளர் மற்றும் நகர ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கொல்லம் தேர்வு மையத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்திருக்கிறது.

தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொண்ட இந்த குழுவைச் சார்ந்தவர்கள் கொல்லம் பகுதிக்கு சென்று இது குறித்து விசாரணை நடத்தவிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பள்ளத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள் மற்ற 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என்று காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மைய வளாகத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleநான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு
Next articleஇன்று நடைபெறுகிறது இலங்கை அதிபர் தேர்தல்! அடுத்த இடைக்கால அதிபர் யார்?