சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 5 வீரர்கள்!!  ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல்!!

0
97
5 players to be retained in Chennai Super Kings team
5 players to be retained in Chennai Super Kings team

Cricket: சி எஸ் கே அணியில் தக்கவைக்கபடும் 5 வீரர்கள். ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் ஐ பி எல் தொடர்.  2025 ல் நடக்கவிருக்கும் 18 வது ஐ பி எல் போட்டியின் மெகா ஏலம் வருகிற நவம்பர் மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த ஐ பி எல் போட்டியானது அடுத்த ஆண்டு மார்ச்,ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும்.

இந்த மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு ஆணியும் தங்கள் அணியில் 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அந்த தக்கவைக்கப்பட்ட பட்டியலை இந்த மாதம் 31 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் இடையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஐ பி எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம் எஸ் தோனி, ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா மற்றும் மத்திஷா பத்திரனா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்க வைக்கும் என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஐ பி எல் அணியில் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது அறிந்தபின் விளையாடும் பட்சத்தில் அவரை முதலாவதாக சி எஸ் கே அணி நிர்வாகம் தக்க வைக்கும் அடுத்த அடியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவிந்திரா ஆகியோரும் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் தக்கவைக்கபடுவார். மத்தீஷா பத்திரான மிகச் சிறந்த பந்து வீச்சாளர் அதனால் அவரும் தக்கவைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

Previous articleமுகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!
Next articleசபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்களும் விமானத்தில் செல்லலாம்!