உங்கள் பழைய பட்டு சேலை புதுசு போல் மின்ன 5 எளிய டிப்ஸ்

0
111
உங்கள் பழைய பட்டு சேலை புதுசு போல் மின்ன 5 எளிய டிப்ஸ்
உங்கள் பழைய பட்டு சேலை புதுசு போல் மின்ன 5 எளிய டிப்ஸ்

பட்டுப்புடவைகள் எப்போதும் பாரம்பரியத்தின் மகுடம்! பெண்கள் எவ்வளவு ஸ்டைலிஷாக இருந்தாலும், பட்டுப்புடவைகளுக்கான காதல் தனி. ஆனால், அதை வாங்குவது ஒரு விஷயமெனில், பராமரிப்பதே பெரிய விஷயம். சரியாக பராமரிக்காவிட்டால் அந்த அழகிய பட்டுப்புடவைகள் எளிதில் மங்கிவிடும். இனி கவலைப்பட வேண்டாம்! இந்த 5 எளிய டிப்ஸ் உங்கள் சேலையை எவ்வளவு வருடங்கள் ஆனாலும் புதிதுபோல் பாதுகாக்கும்.

பட்டுப்புடவைகளின் அழகை நசுக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்று பர்ஃபியூம். பட்டுப்புடவையின் நெசவுத்தன்மை மற்றும் மினுமினுப்பு பாதிக்கப்படாமல் இருக்க, பர்ஃபியூம் பயன்படுத்தும்போது இடைவெளியை கடைபிடிக்கவும். நெருக்கமாகத் தெளித்தால், ரசாயனங்கள் துணியை பாதிக்கலாம்.

சேலையை அணியும்போது பர்ஃபியூம் அடிக்க வேண்டுமானால், அதை ஒரு அடி தள்ளி வைத்து ஸ்பிரே செய்யுங்கள்.

சேலிகளை நேரடியாக பிளாஸ்டிக் ஸ்டோரேஜ் கவர்களில் வைக்காதீர்கள்.

பட்டுப்புடவைகளை காட்டன் பேக்கில் வைத்து, பின் சேமிக்கலாம்.

இதனால் உங்கள் சேலைகளின் காற்றோட்டம் சரியாக இருக்கும்.

பொதுவாக பூச்சி தொல்லையைத் தடுக்கும் நாப்தலின் உருண்டைகள் பட்டை பாதிக்கின்றன இதனால் இந்த உருண்டைகளை பயன்படுத்தாதீர்கள். பட்டுப்புடவைகளை மற்ற துணிகள் அல்லது உடைகளுடன் சேர்த்து வைப்பதைத் தவிர்க்கவும். தனியொரு இடத்தில், போதிய இடவசதியுடன் வைக்கும்போது அதன் மடிப்புகள் நீடிக்கும்.

பட்டு சேலைகளுக்கென்றே தனியாக ஒரு ரேக் அல்லது இடத்தை அமைக்கவும். பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், 3-6 மாதங்களுக்கு ஒருமுறை பட்டுப்புடவையை வெளியே எடுத்து, சூரிய ஒளியிலிருந்து விலகி காற்றோட்டமாக வைத்துக் கொள்ளவும்.

நேரடியாக சூரிய வெளிச்சத்தில் வைக்காமல், சீரான காற்றோட்டத்தில் உலர விடுங்கள்.

மீண்டும் மடித்து வைக்கும் போது, மடிப்புகளை மாற்றி வையுங்கள்.

Previous articleஇவர்கள் இருவருடன் நடிக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்!! வெளிப்படையாக பேசிய அர்ஜுன்!!
Next articleதாய்மை அடைவதற்கு தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகள்: சிறப்பு தொகுப்பு.