செங்கல்பட்டில் பயங்கரம் சம்பவ இடத்தில் பலியான 5 பெண்கள்!! குடிப்போதையில் இளைஞர் செய்த செயல்!!

Photo of author

By Vinoth

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு கிராம பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஆடு,மாடு மேய்த்து கொண்டிருந்த சுமார் 10-க்கும் அதிகமான பெண்கள் இருந்தனர். அதில் 5 பெண்கள் மட்டும் சாலையின் ஓரமாக அமர்ந்து ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தனர்.

சற்றும் யாரும் எதிர் பாக்காத நிலையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த அதி வேகமாக வந்த ஒரு கார் அங்கு அமர்ந்தது இருந்த 5 பெண்களின் மேல் ஏறியது. அதில் சம்பவ இடத்தில் 5 பெண்களும் இறந்தனர். மேலும், உடல் நசுங்கி உயிரிழந்தவர்கள் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக அடித்தனர். கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருவரை பிடித்த போலீசார் விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது நடக்கும் அதிகபடியான விபத்துகள் இந்த குடி போதையில் தான் நடக்கிறது. இந்த மாதிரியான விபத்துகள் அதிகம் சிறுவயது இளைஞர்கள் தான் மது போதையில் செய்தது விடுகின்றனர். மேலும் இதற்க்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் தான் இதற்க்கு தீர்வு கிடைக்குமா என பொது மக்களினின் வேண்டுகோளாக இருக்கிறது.