5 வயது சிறுமி பலாத்காரம்! மூடி மறைக்க நினைத்த பஞ்சாயத்தார் சாட்டையை சுழற்றிய காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சார்ந்த ஒருவர் சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து 5 வயது பச்சிளம் பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது, இந்த நிலையில், ஊர் மக்கள் அவரை பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர்.

ஆனாலும் அந்த பஞ்சாயத்தில் அந்த குற்றவாளிக்கு தட்டனையாக வெறும் 5 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவரும் 5 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டாராம்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து கோபம் அடைந்த சமூக வலைதளவாசிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த காணொளி அந்த மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைதள வாசிகளால் வலியுறுத்தப்பட்டது.

ஆகவே குற்றவாளியின் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தை மூடி மறைக்க நினைத்தவர்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் மங்களா தெரிவித்திருக்கிறார்.