இந்த செல்லப்பிராணியை வளர்த்தால் கட்டாயம் 5 ஆண்டு சிறை!! அதிரடி காட்டும் வனத்துறை!!
வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்கள் பறவைகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு சட்ட விதிமுறை உள்ளது. ஆரம்பகட்ட காலத்தில் இது குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏதுமில்லை. தற்பொழுது மாநகராட்சியானது இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு லைசன்ஸ் பெற வழிவகை செய்கிறது. அந்த வகையில் நாய்கள் வளர்ப்பதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும். அதுவே பறவைகள் வளர்க்கவே கூடாது என்ற தடை சட்டம் ஒன்று உள்ளது.
பெரும்பாலான பறவையினமானது அழிந்து கொண்டே வருவதால் இவ்வாறான தடைச் சட்டம் ஆரம்பகட்ட காலத்திலிருந்து உள்ளது. ஆனால் மக்களுக்கு இது குறித்து தெரியவில்லை. தற்பொழுது இந்த பறவை வளர்ப்பு குறித்து வன உயிரின பாதுகாப்பாளர்கள் கறார் காட்டி வருகின்றனர். யாரேனும் வீடுகளில் பறவைகளை வளர்த்து வந்தால் உடனடியாக அவைகளை வெளியே விட்டுவிடும் படி கேட்டுள்ளனர். மேற்கொண்டு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட வளர்க்கப்படும் ஒரு சில பறவை இனங்களுக்கு மட்டும் கட்டாயம் உரிமம் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பறவை இனத்தை பாதுகாக்கவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் சந்தைகளில் பறவைகளை ரூ 500 முதல் விற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இதன் மூலம் விற்பனையாகி வருகிறது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. இனிவரும் நாட்களில் பறவைகளை செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்த்து வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பத்தாயிரம் அபராதமும் மூன்று முதல் ஏழு ஆண்டு சிறைவாசமும் அனுபவிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.