TN Gov: தமிழக அரசானது மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு ஏற்ற பலத் திட்டங்கள் அமலில் உள்ளது. மேற்கொண்டு புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏராளமான கடன் உதவிகளை வழங்குகிறது. அந்த வகையில் ஆடு, கோலி மற்றும் பன்றி ஆகிய பண்ணைகள் அமைக்க தமிழக அரசு கிட்டத்தட்ட 50 லட்சம் வரை கடன் வழங்க தயாராக உள்ளது.
இது ரீதியான அறிவிப்பை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, புதிதாக பண்ணை வைக்க விரும்புவோர் தமிழக அரசின் கால்நடை பண்ணை வளர்ப்பு திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இத்திட்டத்திற்காக கடந்த 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்குதலிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இதன் முக்கிய நோக்கமே தமிழகத்தில் பண்ணைகளை உருவாக்கி அதன் மூலம் ஆடு கோழி முட்டை போன்றவைகளின் உற்பத்தியை அதிகரிப்பது தான், மேற்கொண்டு இதன் மூலம் பல பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அந்த வகையில் நாட்டு கோழி பண்ணை அமைக்க 25 லட்சமும், செம்மறி அல்லது வெள்ளாடு பண்ணை நிறுவ பத்து 10 லட்சம் எனத் தொடங்கி 50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பிற்கு 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்குகிறது.
மேற்கொண்டு இதற்கு தீவனம் வழங்குவதற்கும் மானியம் வழங்குகின்றனர். இது ரீதியாக பயன்பெற விரும்புவோர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://nlm.udayamimitra.in விண்ணப்பம் செய்யலாம். மேற்கொண்டு தகவல்களை அறிய கட்டாயம் அருகிலிருக்கும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் எனக் கூறியுள்ளார்.