அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!!
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சி நிர்வாகிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல ஊழல்கள் செய்து வருவதாக ஆங்காங்கே புகார்கள் வருகிறது.இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் திமுக நிர்வாகிகளின் கணவண்மார்கள் வேலை செய்யும் ஊழியர்களை அதிகார தோரணையோடு மிரட்டுவதும்,அவர்களிடம் வேலை வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.இதுகுறித்தும் புகார்கள் வந்த வண்ணமே தான் உள்ளது.
அந்த வகையில் கன்னியாகுமரி அருகே புத்தளம் பேரூராட்சியின் தலைவராக சத்தியவதி உள்ளார். இவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி பணத்தை ஏமாற்றுவதாக பல புகார்கள் வந்துள்ளது. இவர் மீது பல புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் தற்பொழுது வரை எடுக்க வில்லை. பாஜக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பேரூராட்சி அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர் இவ்வாறு செய்வது அவர் கட்சியை சேர்ந்தவர்களுக்கே பிடிக்கவில்லை. அதனால் அவர்களும் எதிர்கட்சி என்று கூட பாராமல் அவர்களுடன் இணைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அரசு வழங்கிய 50 லட்சம் நிதியை சத்தியவதி கணக்கில் கொண்டு வராமல் இருந்துள்ளார். இதன் காரணமாக பாஜக, அதிமுக, திமுக ஆகியோர் இணைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.