இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! 

Photo of author

By Rupa

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை அமைத்து அதிலிருந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகள் படிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த உத்தரவானது கடந்த வருடம் நவம்பர் மாதம் அமலுக்கு வந்தது. அதனை அடுத்து உயர்நீதிமன்றத்தின் அதனை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. பதில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்தத் தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் இவ்வாறு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்தால் தேவையற்ற பாகுபாட்டை ஏற்படுத்தும் என காஞ்சிபுரத்தை சேர்ந்த என் கார்த்திகேயன் என்பவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ அரசு டிப்ளமோ போன்ற மேல் படிப்புகளுக்கு அரசு மருத்துவர்கள் மட்டும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பாகுபாடு ஏற்படுத்தும் என கூறியுள்ளார். எனவே இவ்வாறான மாநில அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுள்ளார். இந்த மனமானது உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ரிட் மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.