தட்டச்சர் பணிக்கு 50 காலிப்பணியிடங்கள்!! வாய்ப்பை வாய்ப்பை விட்றாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமானது(TNPSC) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள 50 தட்டச்சர்(Typist) பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC)

பணியின் பெயர்: தட்டச்சர்

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெட்டிருந்தால் போதும்.அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமின்றி அரசு தொழில்நுட்பத் தேர்வில் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

18 வயது முதல் 32 வயது வரை தகுதி வாய்ந்த நபர்கள் தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

பதிவு கட்டணம் ரூ.150/-

தேர்வு கட்டணம் ரூ.100/-

தேர்வு முறை:

1)எழுத்து தேர்வு(பத்தாம் வகுப்பு தரம்)
2)சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க இறுதி நாள்:

டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் தட்டச்சர் பணி தேர்விற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

http://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.