ஓடும் காரில் இருந்து 500 ரூபாய் நோட்டுக்கள் வீசப்பட்டது! ஆத்தூர் அருகே பரபரப்பு

Photo of author

By Parthipan K

ஆத்தூரை அடுத்த குட்டம் பாறை என்ற இடத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரில் திடீர் என பின்புறத்தில் அமர்ந்திருந்த ஒருவர் கார் கண்ணாடியை வேகமாக திறந்து 500 ரூபாய் நோட்டுகளை வீசியுள்ளார். இதனையடுத்து அந்த கார் வேகமாக சேலம் நோக்கி சென்றுள்ளது.

மேலும் இதை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் குட்டம் பாறை பாலம் அருகே லாரி ஒன்றை நிறுத்தி பழுது பார்த்து கொண்டிருந்தவர்கள் மகிழ்ச்சியில் அந்த 500 ரூபாய் நோட்டுக்களை வந்து எடுத்து சென்றனர்.

மேலும் அந்த கார் நிக்காமல் வேகமாக சேலம் நோக்கி சென்று விட்டது.எதற்காக இந்த ரூபாய் நோட்டுக்களை வீசி சென்றார்கள் என்று தெரியாத சூழலில் இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.