பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, சென்ற 16 மாத காலமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மறுபடியும் செயல்பட தொடங்குவதால் வெளியூர் சென்று இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப இருக்கிறார்கள்.
அத்துடன் மூன்று தினங்கள் தொடர் விடுமுறை காரணமாகவும், சென்னையிலிருந்து பலர் வெளியூர் சென்று இருக்கிறார்கள். வெளியூர் போனவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருச்சி ,சேலம், ஓசூ,ர் தர்மபுரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து விழுப்புரம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. அதேபோல கும்பகோணம், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பாக இந்த ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. சேலம் போக்குவரத்து கழகத்தின் மூலமாக 50 பேருந்துகளும் இதைத்தவிர பொள்ளாச்சி, திருப்பூர், கோயமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் மற்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றது. மற்ற போக்குவரத்து கழக பேருந்துகள் கூடுதலாக இயக்க போதிலும்கூட அரசு விரைவு பேருந்துகள் வழக்கமான அளவில்தான் இயக்கப்படுகின்றன.
தற்சமயம் தமிழ்நாடு முழுவதும் 750 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் அதேபோல 350 குளிர்சாதன விரைவு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி, கல்லூரிகள் திறப்பதன் காரணமாக, பேருந்து தேவை அதிகரிக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார்.