நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா வங்கி.இந்த வங்கியின் கிளை அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.தற்பொழுது இந்த வங்கியில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது.
வேலை வகை: வங்கி வேலை
நிறுவனம்: BANK OF BARODA (பேங்க் ஆஃப் பரோடா)
பணி: அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025
மாத ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதியின்படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 26 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.bankofbaroda.in/career/ என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 23 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
தேர்வு எழுதவுள்ள மையங்கள்:
சென்னை
சேலம்
திருச்சி
வேலூர்
திருநெல்வேலி
மதுரை
தேர்வு கட்டணம்:
SC/ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.மற்றவர்களுக்கு ரூ.600 விண்ணப்பக்கட்டணமாகும்.