ரூ 210 செலுத்தினால் மாதம் 5000!! மத்திய அரசின் அசத்தல் திட்டம் உடனே விண்ணப்பியுங்கள்!!
இந்த காலகட்டத்தில் பல இளைஞர்களும் தங்கள் சம்பளத்திலிருந்து சிறிதளவு கூட சேமித்து வைக்காமல் தற்போது நிலைக்கு ஏற்ப செலவழித்து வருகின்றனர். இவ்வாறு செய்வது பிற்காலத்ல் அவர்களுக்கு சிரமத்தை தான் ஏற்படுத்தும். இதனை எல்லாம் தவிர்க்க தான் போஸ்ட் ஆபீஸ் மூலம் மத்திய அரசானது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஆனால் இதனை அறிந்து பெரும்பாலானோர் பயனடைவதாக தெரியவில்லை. எனவே ஒவ்வொருவரும் தங்களது கடைசி காலம் வரை பயன்பெறும் வகையில் புதிய பென்ஷன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் அடல் பென்ஷன் யோஜனா. இத்திட்டத்தினை தனியார் வங்கி, தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் தொடங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தை தொடங்குவதற்கு ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு கட்டாயம். ஆண்லைன் மூலம் தொடங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் உங்கள் வசதிக்கேற்ப ஒரு வருடத்தில் மாதம் என்ற நிலைப்பாட்டிலோ அல்லது காலாண்டு, அரையாண்டு என்ற நிலைப்பாட்டிலும் நீங்கள் தொகையை செலுத்தலாம்.
அவ்வாறு இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் தொகை செலுத்தி வருபவர் மரணிக்க நேர்ந்தால் அவர்களின் துணைக்கு இந்த திட்டம் சென்றடையும். துணை இல்லை என்றால் அவர்களுடைய நாமினிக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். மாதந்தோறும் 210 செலுத்தினாலே பிற்காலத்தில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வரை பென்ஷன் வாங்கிக் கொள்ளலாம். தொகையை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான பென்ஷன் தொகையும் அதிகரிக்கும்.
இத்திட்டத்தின் கீழ் இணைபவர்கள் 40 வயதிற்குள் இதனை தொடங்க வேண்டும். மேற்கொண்டு இத்திட்டத்தில் இணைந்து விட்டு நடுவில் விலக நினைத்தால் அவர்களுக்கு தாங்கள் கட்டிய தொகை மற்றும் அதற்கு உண்டான வட்டி மட்டுமே வழங்கப்படும். அரசு கூடுதலாக வழங்கும் எந்த ஒரு மானியமும் கிடைக்காது. பிற்காலத்தில் கைகொடுக்கும் இந்த திட்டத்தை பலரும் அறிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.