மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை

Photo of author

By CineDesk

மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் ICFRE  இந்திய வனவியல் கவுன்சிலில் வேலை

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளிவிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பில்  Subject Matter Specialist, Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant, போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணிஇடங்களை நிரப்புவதற்க்காக இந்த அறிவிப்பு வெளிவிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  B,SC., M.SC., M.Tech  என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இப்பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விபரம்

தேர்வு  செய்யப்படுபவர்கள் பணியின் அடிப்படையில் ரூ .19,000/-முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து  16.11.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.