கோவை மாநாட்டில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

0
171

தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இருக்கக்கூடிய ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் தொழில்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரிலான முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று கோவை கொடிசியா வளாகத்தில் நடந்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டின் மூலமாக 82 திட்டங்கள் 52 ஆயிரத்து 549 கோடியில் புதிதாக வர உள்ளது இதன் மூலமாக 8,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 34 ஆயிரத்து 223 கோடி முதலீட்டில் 74 ஆயிரத்து 835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் விதத்தில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளன.

அதனடிப்படையில் கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ஈரோடு, திண்டுக்கல்,, திருப்பூர், போன்ற மாவட்டங்களில் தகவல் தரவு மையம் வாகனங்கள் தயாரிப்பு, சிமெண்ட் உற்பத்தி, தொழில் பூங்கா, காற்றாலை, ஜவுளி பூங்கா, நூற்பு ஆலைகள், உட்பட பல தொழில்கள் செய்வதற்கான நிறுவனங்கள் அமைய இருக்கிறது.

அதோடு 482 கோடி ரூபாய் முதலீடு மற்றும் ஆயிரத்து 960 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற விதத்தில் 7️ வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

அதனடிப்படையில் காஞ்சிபுரம், ஓசூர், சேலம், திருச்சி கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் வர இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

ஒட்டு மொத்தமாக 35 ஆயிரத்து 208 கோடியே 76 ஆயிரத்து 795 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதத்தில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

டிட்கோ நிறுவனம் தயாரித்து இருக்கின்ற மாநிலத்தில் இருக்கும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொழில் நிறுவனங்களின் கையேடு ஒன்றினையும் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.

வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஒரு  மையத்தை டிட்கோ நிறுவனம் டசோ சிஸ்டம் நிறுவனத்துடன் ஒன்றாக இணைந்து நிறுவ இருக்கின்றது 212 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்த திறன் மற்றும் ஐயம் பொருள் வடிவமைப்பு உற்பத்தி மேம்பாடு புரோட்டோ டைப்பிங் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு உள்ளிட்ட விவரங்களை மற்றும் பாதுகாப்பு தொழிலாகங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், வழங்கும்.

அதோடு இதன் மூலமாக தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுடன் முன்னரே இயங்கிவரும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு பயனுள்ளதாக அமையும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் பரிமாற்ற பட்டதாக தெரிகிறது.

அதேபோன்று 13 ஆயிரத்து 413 கோடியில் 14681 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் 13 திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாமக்கல், ராணிப்பேட்டை, விருதுநகர், உள்ளிட்ட பகுதிகளில் அமைய இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் 3 ஆயிரத்து 922 கோடி ரூபாய் முதலீட்டில் 3944 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்தில், 10 திட்டங்களில் வணிக உற்பத்தியை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார் இந்த திட்டங்களின் மூலமாக 52 ஆயிரத்து 549 கோடி முதலீட்டில் 92 ஆயிரத்து 420 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, உள்ளிட்ட 22 மாவட்டங்களில் முதலீடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத் தொழில்நுட்பக் கொள்கை 2021 வெளியிட்டு இருக்கிறார். அதோடு சென்னையில் நிதிநுற்பகம்  இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் நியோ டைடல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த கொள்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

Previous articleதேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்ட மனுக்கள்!
Next articleமீண்டும் வேகம் எடுக்கும் கனமழை! அவசர ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர்!