திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்கா என்னும் நகரைச் சார்ந்தவன் ராகுல். அதே பகுதியில் அந்த மூதாட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ராகுல் நேற்று குடிபோதையில் அவரது கடைக்கு சென்று பொருள் வாங்குவது போல நடித்து பேசி உள்ளான். அப்பொழுது ஊறுகாய் கேட்ட அவனுக்கு
அந்த மூதாட்டி பொருளை எடுத்து கொண்டிருந்த நிலையில்
அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு யாரும் இல்லாததை அறிந்த காமுகன் மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளான்.
மூதாட்டியின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர் இக்கொடூற சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திலேயே அவனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
பின் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் ராகுலை கைது செய்தனர்.
இதன்படி அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அவன் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளது தெரிய வந்தது.
அவன் ஏற்கனவே வட மாநில பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பெருகி வரும் நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.