திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் 55 அடியில் மிக அதிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை!

0
230
#image_title

திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் 55 அடியில் மிக அதிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை!

திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் 55 அடியில் மிக அதிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை: ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைனில் திறந்து வைத்தார்.

கேரள மாநிலம் திருச்சூர், பூங்குன்னம் பகுதியில் பிரசித்தி பெற்ற சீதாராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மிகப்பெரிய தங்க தேர் உள்ளது. இது போல மிகஉயரமான அனுமன் சிலை ஒன்றை அமைக்கவும் கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்காக ஆந்திராவில் உள்ள நந்திகிராம் பகுதியில் அனுமன் சிலை அமைக்கும் கல் கிடைத்தது.

ஒரே கல்லில் 35 அடி உயரத்தில் அங்கு அனுமன் சிலை செய்யும் பணி தொடங்கியது. சிற்பி சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிற்பிகள் இச்சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தற்போது திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோவிலில் இச்சிலை நிறுவப்பட்டது.

20 அடி பீடத்தில் 35 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைந்துள்ளது. வலது கை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையிலும், இடது கையில் கதாயுதத்தை ஏந்தியபடியும் சிலை அமைந்துள்ளது. இச்சிலை தென்னிந்தியாவிலேயே மிக அதிக உயரமுள்ள சிலையாகும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.மிகவும் புகழ்பெற்ற பூங்குன்னம் சீதா ராம சுவாமி கோவிலில் சீதையும், ராமரும் ஒரே பீடத்தில் காட்சி அளிக்கின்றனர்.

இக்கோவிலில் லட்சுமணர், அனுமன், ஐயப்பன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். கோவில் குளத்திற்கு அருகே சிவன் சன்னதி ஒன்றும் உள்ளது. இங்கு சிவலிங்கமும், அதற்கு எதிரே நந்தி சிலையும் அமைந்துள்ளன.1895 ம் ஆண்டு கொச்சின் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த திவான் பகதூர் டி.ஆர்.ராமச்சந்திர ஐயர் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ராம நவமி விழாவின் போது நடத்தப்படும் சீதா கல்யாண உற்சவத்தை தற்போது வரை இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பொறுப்பேற்று நடத்துகிறார்கள். பல பெருமைகளையும், சிறப்புக்களையும் கொண்டு புகழ்பெற்று விளங்கும் சீதா ராம சுவாமி கோவிலில் தென்னிந்தியாவின் மிக உயரமான அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.இந்த சிலையை பிரதமர் மோடி ஆன்லைனில் திறந்து வைத்து பக்தர்களுக்கு அர்பணித்தார்.

Previous articleபாதுகாக்கப்பட்ட வனப் பகுதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாற்றியமைப்பு 
Next articleவிழுப்புரம் சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் மாயமான வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்!