மலிவான விலையில் 5G ஜியோ போன்; விரைவில் அறிமுகம்!

Photo of author

By Vijay

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, 2021 அக்டோபரில் ஜியோ போன் நெக்ஸ்ட் ஐ அறிமுகப்படுத்தியது. நாட்டின் உயர்மட்ட நகரங்களுக்கான 5ஜி கவரேஜ் திட்டங்களை நிறுவனம் சமீபத்தில் நிறைவு செய்துள்ளது. இந்த 5ஜி சேவைகள் ஜூன் மாதம் நடைபெறும் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜியோ போன் 5ஜி அறிமுகமாகலாம்.

ஜியோ போன் 5ஜி ஆனது எச்டி பிளஸ்(1600×720 பிக்சல்கள்) ரெசல்யூசன் கொண்ட 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வரும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதில் 13எம்பி முதன்மை லென்ஸ் இருக்கும் என்றும், இரண்டாம் நிலை லென்ஸ் 2எம்பி மேக்ரோ சென்சார் இருக்குமென்றும் கூறப்படுகிறது. முன்புறத்தில் 8எம்பி செல்பி கேமராவை கொண்டிருக்கும்.

இதில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சாதனத்தில் 5000 எம்ஏஹச் நீக்க முடியாத பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதகவும், 18 வாட்ச் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சாதனத்தில் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் உள்ளதாக கூறப்படுகிறது.