முகம் பொலிவு பெற்று பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருக்க 6 டிப்ஸ்
முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் – Tips For Glowing Face Naturally at Home in Tamil
ஆண்கள் முதல் பெண்கள் வரை மறு, பரு எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். இதனால் ஒவ்வொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர்.
அதில் பெரும்பாலான மக்கள் கடைபிடிப்பது கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் தான். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் இந்த கிரீம்கள் முகத்திற்கு தற்காலிகமான அழகை மட்டுமே கொடுக்கிறது, நாளடைவில் இந்த கிரீம்கள் அதிக சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையை சொன்னால் நம்முடைய சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு பெரிதாக நாம் எதுவும் செய்ய வேண்டாம். நாம் அன்றாடம் செய்கின்ற சில விஷயங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதும் முகம் பளபளவென ஜொலிக்கும்.
அந்த வகையில் இயற்கையாக சருமத்தை பொலிவு பெற கடைப்பிடிக்கவேண்டிய ஆறு வழிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முகத்தில் கை வைக்க கூடாது:
Glowing Skin Tips in Tamil:
முகத்தில் அடிக்கடி கை வைப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படி வைத்தால் நம் கைகளில் இருக்கும் கிருமிகள் முகத்தில் உள்ள துளைகள் வழியாக உள்சென்று பரு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
உங்களுக்கு ஏற்கனவே முகப்பரு இருந்தால் அதை கிள்ள கூடாது.
தூங்கும் போது சுத்தமான தலையணையை உபயோகபடுத்துவது நல்லது, ஏனெனில் தலையில் இருக்கும் பொடுகு, எண்ணெய் தலையணையில் இருக்கும், அதில் நீங்கள் முகத்தை வைத்து உறங்கும்போது விரும்பத்தகாத சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
முகத்தை அடிக்கடி கழுவ கூடாது. குறிப்பாக சருமத்தை ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே கழுவுவது நல்லது.
முகத்தை அழகுபடுத்து அதிகமான அழகுசாதன பொருட்களை உபயோகபடுத்த வேண்டாம். இரவு தூங்குவதற்கு முன்பு மேக்கப் போட்டிருந்தால் கட்டாயம் அதை கழுவி விட்டு உறங்கவும்.
தண்ணீர்:
Tips For Glowing Face Naturally at Home in Tamil:
உடலில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வது மிகவும் முக்கியம், அப்போது தான் முகம் நல்ல பொலிவு பெரும். அந்த வகையில் அடிக்கடி நீர் அருந்துவது சருமத்திற்கு மிகவும் நல்லது.
அதே நேரத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க பிடிக்காதவர்கள் நெல்லிக்காய் ஜூஸ், மாதுளை ஜூஸ் போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம்.
உணவு:
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது நம்முடைய உணவு தான். அந்த வகையில் அதிகமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
முடிந்தவரை Fast Food பெரும்பாலும் தவிர்த்திடுங்கள்.
சூரிய ஒளி:
Glowing Skin Tips in Tamil:
வெயில் காலத்தில் sunscreen பயன்படுத்துங்கள்.
காலை, மாலை வேளைகளில் அடிக்கும் இளம் வெயிலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது அதனால் காலை, மாலை வெயில் உடலுக்கும்,சருமத்திற்கும் நல்லது.
உடற்பயிற்சி:
உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கினாலே நம்முடைய முகம் மிகவும் அழகாக இருக்கும்.
அதனால் உங்கள் உடலுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது. இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள துவாரங்கள் திறந்து, வியர்வை வெளியேறி, சருமம் இயற்கையான அழகைப் பெற வழி கிடைக்கும்.
தூக்கம்:
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இவ்வாறு கடைபிடிப்பது சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் நன்மையை கொடுக்கும்.
மேலே கூறப்பட்ட விஷயங்களை பின்பற்றினாலே முகம் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.