தமிழ் ஹீரோக்களோடு நடித்து ஹிட் கொடுத்த 6 மலையாள ஸ்டார்கள்!!! ஆரம்பமே அதிரடியான கூட்டணி தான்!!!

0
32
#image_title

தமிழ் ஹீரோக்களோடு நடித்து ஹிட் கொடுத்த 6 மலையாள ஸ்டார்கள்!!! ஆரம்பமே அதிரடியான கூட்டணி தான்!!!

தமிழ் சினிமாவில் வேறு மொழி சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் கெஸ்ட் ரோல் செய்வது கேமியோ ரோல் செய்வது என்பது தற்பொழுது உருவானது அல்ல. இது 1990களில் இருந்தே இருக்கின்றது.

மேலும் கெஸ்ட் ரோலில் நடிப்பது மட்டுமில்லாமல் படம் முழுக்க நடிக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். படம் முழுக்க நடித்துக் கொடுத்து படத்தை மிக பெரிய அளவில் வெற்றியடையச் செய்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர்களுடன் நடித்த டாப் 6 மலையாள நடிகர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் மம்மூட்டி…

நடிகர் மம்மூட்டி அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 1991ம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நண்பன் கதாப்பாத்திரத்தில் பட முழுவதும் நடித்திருப்பார். நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் நடிகர் மம்மூட்டி அவர்களும் உலகின் சேர்ந்து அதிரடியான நடிப்பை தளபதி திரைப்படத்தில வெளிப்படுத்தி இருப்பார்கள். இதனால் அப்பொழுது தளபதி திரைப்படம் மாபெரும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மோகன் லால்…

நடிகர் மோகன் லால் அவர்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆர்.டி நேசன் அவர்கள் இயக்கியிருந்தார். ஜில்லா திரைப்படத்தில் நடிகர். விஜய் அவர்களின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். மேலும் இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இவரது கேமியோ ரோல் ஜெயிலர் திரைப்படத்தில் சிறப்பான ஒன்றாக இருந்தது.

நடிகர் பகத் பாசில்…

நடிகர் பகத் பாசில் அவர்களை இயக்குநர் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் அமைதியான வில்லன் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார். மேலும் நடிகர் பகத் பாசில் அவர்களை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும், நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார்.

நடிகர் கலாபவன் மணி…

மறைந்த நடிகர் கலாபவன் மணி அவர்கள் நிறைய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் நடிப்பில் குத்து, நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் ஜெமினி, நடிகர் சூரியா நடிப்பில் வேலு இன்னும் பல தமிழ் படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான பாபநாசம் திரைப்படத்திலும் நடிகர் கலாபவன் மணி அவர்கள் நடித்திருந்தார்.

பிருத்திவிராஜ் சுகுமாரன்…

நடிகர் பிருத்திவிராஜ் அவர்கள் இயக்குநர். மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த ராவணன் திரைப்படத்தில் நடித்திருப்பார். ராவணன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார்.

நடிகர் ஜெயராம்…

நடிகர் ஜெயராம் அவர்கள் தமிழில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் வெளியான தெனாலி, பஞ்ச தந்திரம், உத்தம வில்லன், நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி, நடிகர் அஜித் நடித்த ஏகன், பரமசிவம், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1&2 ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தி இருப்பார். இவர் மேலும் பல தமிழ் படங்களில் கேமியோ ரோல் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

மேலே கூறப்பட்டவர்களில் சிலர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்திருப்பார்கள். இந்த லிஸ்டில் சொல்லப்படாத நடிகர்களின் பெயர்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.